திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை குறித்த விளக்க கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, மக்கள் கலைந்து சென்றனர். இதை தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும், நாளிதழ் புகைப்படக் கலைஞரும் படம் எடுத்ததால், அவர்கள் மீது பாஜகவினர் தாக்கினர்.