தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கை தொடரும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்காப்புக்காக மட்டுமே பாலியல் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் கொடுத்தார்.