மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என்றும், மீறி செயல்படுத்தப்பட்டால் கூட்டணி அரசியலை கடந்து மக்களுடன் போராடுவோம் எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். கச்சத்தீவில் தொடங்கி இதுவரை திமுக அரசு தூங்கிக் கொண்டு இருப்பதாக விமர்சித்தவர், டங்ஸ்டன் திட்டம் குறித்து முன்பே தெரியாது என தமிழக அரசு சொல்வது தவறு என்றார்.