மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த ஒரு கொம்பன் வந்தாலும் முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாகவும், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார்.