மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும், தங்களின் பாவ சுமைகளை போக்கிக் கொள்ள, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடி, சிவனை வழிபட்டு, பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத துலா உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு காவிரியில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும். அந்த வகையில், ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி, ஐப்பசி மாத துலா உற்சவம் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி காவிரி அன்னை மற்றும் சிவாலயங்களில் வழிபாடு நடத்தினர். ஐப்பசி மாதம் 30ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானகோனார் வந்து புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.