கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது 3 மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். குப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கார்த்திகை செல்வி என்பவருக்கு இளம் வயதில் மூன்று மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு i natruralist என்ற வெப்சைட் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து கார்திக் மற்றும் அவரது மனைவி பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்வதாக கூறி 3 மகள்களையும் வேலைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த கார்த்திகை செல்வி பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அங்கு பணியில் இல்லாதது தெரியவந்தது.