திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள எல்லையில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவர், வனத் துறையினரிடம் சிக்காமல் இருக்க அமராவதி அணையின் பின்புறம் உள்ள புங்கன் ஓடையில் குதித்த போது முதலைகளிடம் ஒருவர் சிக்கினார். நிகழ்விடத்திற்கு வந்த தமிழக தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு பின் அவரை மீட்டு கேரள வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சந்தன மரங்கள கடத்த முயன்றவர் சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதை கண்டறிந்த அதிகாரிகள் அவரிடம் இருந்து சந்தனமர கட்டைகளை கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய மறையூர் பகுதியை சேர்ந்த இளையராஜாவை தேடி வருகின்றனர்.