கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே விவசாயியை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்ற வடமாநில இளைஞரை பிடித்து அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடகா மாநிலம் மாலூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவர், பாகலூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நான்காயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது, அங்கிருந்த வடமாநில இளைஞர்கள் இருவர், நவீன்குமாரை ஏமாற்றி அவரிடமிருந்து ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்து நவீன்குமார் கூச்சலிட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் ஓடி வந்த போது, வடமாநில இளைஞர் ஒருவர் தப்பி சென்ற நிலையில், மற்றொருவனை அவர்கள் மடக்கி பிடித்தனர்.இதையும் படியுங்கள் : நகராட்சி பூங்காவில் தூய்மை பணியாளராக இருந்த லட்சுமி... டீ குடிக்க சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினார்