தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவிசநல்லூர் மெயின் ரோட்டில் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர், இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். அரை மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்தும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த நபர், அங்கிருந்து தப்பி சென்றார்.