திருச்செந்தூர் வருகை தந்த அமைச்சர் கே.என். நேருவை வியாபாரிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 315 ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்த கடைகளுக்கு 4 ஆயிரத்து 200 ரூபாய் அளவிற்கு நகராட்சி நிர்வாகம் வரியை உயர்த்தியுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் குற்றம்சாட்டினர். வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, வியாபாரிகள் அமைச்சரை சந்திக்க போலீஸார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.