தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்களின்றி கனிம வளம் கொண்டு சென்றதாக லாரிகளை தேனி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் சிறைப்பிடித்தனர். உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைபிடித்து நிறுத்தி வைக்கப்பட்டன. கேரள பதிவெண் கொண்ட இந்த லாரிகள் தார் ஜல்லி கலவைகளை ஏற்றிக்கொண்டு சென்றன. இதனைதொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.