சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி, மதுரை அருகே டயர் வெடித்து தலைகீழாக கவிந்தது. எதிரே எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், லாரி கவிழ்ந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.