கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற Swift காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அதிகாலை மூன்று மணியளவில் பு.முட்லூர் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.