கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றவர் நடை பாலத்தின் வழியாக சென்று சிக்கிய நிலையில், கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த முகமது என்பவர் காரில் கோவை சென்று திரும்பிய போது குளித்தலையில் உள்ள பள்ளிவாசலுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றார். அப்போது தென்கரை பாசன வாய்க்கால் குறுக்கே உள்ள நடை பாலத்தில் கார் சிக்கியது. பத்திரமாக காரில் இருந்து வெளியேறிய முகமது கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டார்.