நில அபகரிப்பு புகாரில், திருச்சி பால்பண்ணை லட்சுமி நகரை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக, திருச்சி காவல் துறை சார்பில் ஆப்ரேஷன் அகழி என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனக்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டதாக மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில், மோகன் பட்டேல் என்பவர் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி நடந்த இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.