செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழையனூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இலவச வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் 3 தலைமுறையாக வசித்துவரும் 12 இருளர் சமூகத்தினருக்கு இலவச வீடு கட்ட தமிழக அரசு பட்டா வழங்கிய நிலையில் வீடுகட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் வீடுகட்ட வழங்கப்பட்டுள்ள இடம் மீது அதே பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததால் வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.