தேனி குரங்கணி மலைப்பகுதியில், தமிழக அரசு அனுமதி உடன் மீண்டும் ட்ரெக்கிங் தொடங்கியது. குரங்கணி மலையில் டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு ட்ரெக்கிங் செல்ல அனுமதி வழங்கி புதிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுற்றுலா பயணிகள் நான்கு பேர் ட்ரெக்கிங் சென்றனர். மலையேற்றத்திற்கு உதவ முதுவாக்குடி பழங்குடியின மக்கள் 5 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சேவை கட்டணமாக ஆயிரத்து 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.