நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில், மரத்தின் உச்சியில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை, மரம் விட்டு மரம் தாவிய காட்சியை சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்ப்புடன் கண்டு ரசித்தனர். முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கம் போல், வனத்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகள் மரத்தின் மீது சிறுத்தை படுத்து ஓய்வெடுத்ததை பார்த்தனர். அப்போது, சிறிது நேரம் மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை, வனத்துறை "ட்ரக்கிங்" வாகனத்தை கண்டவுடன் மரம் விட்டு மரம் தாவியது. பின்பு மெதுவாக கீழே இறங்கிய சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடியது. இந்த அரிய காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததோடு, அதை வீடியோ பதிவு செய்துள்ளது சமூக வலை தளங்களில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது.