ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே, காட்டுப்பாக்கத்தில் தலைமறைவான போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர். லோகநாதன் என்ற அந்த நபர், முறையான மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சோதனைக்கு சென்ற அரசு மருத்துவ அதிகாரிகள், போலி மருத்துவர் லோகநாதனின் கிளினிக்கை மூடி சீல் வைத்தனர்.