நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியின் சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.