திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. முன்பதிவில்லா டிக்கெட்டை வாங்கிக் கொண்டு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தவர் ஏறுவதாக தொடர் புகார் எழுந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்து அனுப்புகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.