திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு உரிய அனுமதி பெறாமல் கல்குவாரியிலிந்து கிராவல் மண் கடத்தியதாக, 2 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொந்தமூர் கிராமத்தில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான கவுரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கிராவல் மண் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.