பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்காலில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஓரளவு அவதிக்கு ஆளாகி உள்ளனர்.