அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீது பொய்யான புகார்களைக் கூறி அதிமுக போராட்டம் நடத்துவதாகவும் அதிமுகவை தன்வசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இபிஎஸ் போராட்டம் அறிவித்ததாகவும் சாடினார்.