சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய புகாரில், காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருடனான பிரச்சனையை தீர்த்து வைத்த காவல் ஆய்வாளர் கண்ணனிடம், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் நெருங்கி பழகியுள்ளார். அப்போது தாம் விவகாரத்து ஆனவர் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, இளம்பெண்ணை காவல் ஆய்வாளர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த ஆய்வாளரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.