திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் திருநங்கைகள் பூந்தோட்டிகளை வீசி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கு பகுதியில் ஏராளமான திருநங்கைகள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து தொந்தரவு செய்வதுடன், வழிப்பறியிலும் ஈடுபடுவதாக பணகுடி போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.அதுமட்டுமல்லாமல் கடையின் முன்பு திருநங்கை ஒருவர் போலீசார் முன்னிலையிலேயே ஆடையை கலைந்து ஆபாசமான முறையில் நடந்து கொண்டார்.இந்நிலையில், விசாரணை நடத்த போலீசார் அவர்களை பணகுடி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றபோது அங்கு திரண்ட திருநங்கைகள் பூந்தொட்டிகளை உடைத்தும், ஆடைகளை கலைந்தும் ஆபாசமான முறையில் நடந்து கொண்டனர். இதனால் தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.