கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புகாட்டில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் திருநங்கையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.