சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேஷன் காலனி பகுதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் மணல்களை அள்ளி தூவி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.