கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள CRPF பயிற்சி கல்லூரியில் பயிற்சி நிறைவு விழாவவை ஒட்டி வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இங்கு நடைபெற்ற பயிற்சியில் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த 40 பெண்கள் உட்பட 567 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.ஜி வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து வீரர்களின் கேரளா நடனம், யோகா, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.