பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜனவரி 12 ஆம் தேதிக்கு செப்டம்பர் 14 ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதிக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.