திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 18 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை செண்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் அரக்கோணம் - புதுச்சேரி, சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே இயங்கும் எம்இஎம்யூ ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.மேலும் டெல்லி - சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ,அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.