திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயனூர் கதவணை பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர், வலையில் சிக்கி உயிரிழந்தார். சீலைப்பிள்ளையார்புத்தூரை சேர்ந்த ராஜேந்திரன்,அவரது நண்பர் மாரியப்பன் உடன் மாயனூர் கதவணை பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். ஆற்றில் இறங்கிய ராஜேந்திரன் ஐந்தாவது ஷட்டர் அருகே வலை வீசி, அதனை இழுத்தபோது எதிர்பாராத விதமாக வலைக்குள் சிக்கியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.