பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் கிராமத்தில் விளை நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார். ஆனந்தன் என்பவர் தனக்கு சொந்தமான வயலை நள்ளிரவில் உழுது கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகிலிருந்த கிணற்றில் கவிழ்ந்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து ஆனந்தனின் உடலை மீட்டனர்.