அரசு சேமிப்பு கிடங்கில் உள்ள லாரியில் வைக்கப்பட்டிருந்த நெல், முளைக்கத் தொடங்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு வரப்படும். இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு விருதாச்சலம் அரசு சேமிப்பு கிடங்கில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்த நெல் மூட்டைகள் பத்து நாட்களாக லாரியிலிருந்து இறக்கப்படாததால், மூட்டையிலேயே நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய இடத்திலேயே லாரியில் இருந்து இறக்கப்படாத நெல் மூட்டைகளில், நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிய சம்பவம், அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக விவசாயிகள் கூறினர்.