மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகைகுளம் பகுதியில் RMS ஆயில் மில் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றி வரும் ராமுத்தாய் என்ற பெண் வேலை செய்துகொண்டிருக்கும் போது, எண்ணெய் இயந்திரத்தில் அவரது ஆடை சிக்கியதாக கூறப்படுகிறது. தொடந்து ஆடையை இழுக்கமுடியாமல் தவித்த பெண் இயந்திரத்தின் சக்கர பகுதியில் சிக்கி உயிரிழந்தார்.