கந்துவட்டி கொடுமையால் தம்பதி விஷம் குடித்த நிலையில், கணவர் உயிரிழந்ததால் கந்துவட்டிக்காரர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் கந்தப் பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் அலங்காநல்லூரை சேர்ந்த வினோத் என்பவரிடம் கந்துவட்டிக்கு வாங்கிய 30,000 ரூபாய் கடனை கொடுக்காததால் வினோத் தனது நண்பர் சிவாவுடன் ராஜா வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜாவும், அவரது மனைவியும் விஷம் குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, வினோத், சிவாவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.