புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விளம்பர பதாகையில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்டிருந்த சீரியல் பல்பை அகற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். வடகாடு முக்கம் பகுதியில் SHOE கடை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவரின் மகன் ராம்குமார் சீரியல் பல்பை அகற்ற முயன்ற போது, அதனருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.