அரியலூர் மாவட்டத்தில் பால்குட திருவிழாவிற்காக கொள்ளிடம் ஆற்றங்கரையில் மக்கள் குவிந்த நிலையில், ஆற்றில் குளித்துகொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குருவாடி கிராமத்தை சேர்ந்த தேசிங்கு ராஜன் என்பவரின் மகன் கஜேந்திரன் பள்ளியில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பின் அம்மன் கோயில் பால்குட திருவிழாவுக்கு வந்தார். பின்னர் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது அச்சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தான்.