கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த கணவர் உயிரிழந்த நிலையில், மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரியூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்னுசாமி - அனுசுயா தம்பதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மின்தடை காரணமாக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்துள்ளனர். ஆனால், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை சரியாக அடைக்காததால், அதிலிருந்து எரிவாயு கசிந்திருந்ததால் திடீரென தீப்பிடித்தது.