திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கூலி தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கங்காதுரை, காரப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனை எதிரே இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில், மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் தகவலளித்தனர். அருகில் சாய்ந்த நிலையில் இருந்த இரும்பு பைப்பை கங்காதுரை சரி செய்ய முயன்ற போது, மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்கம்பியில் பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.