விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து மாயமான சகோதரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கணேசனின் மகன்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அண்ணன் லோகேஷ் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்ட இரட்டை பிறவிகளான விக்ரம், சூர்யா ஆகியோர், அவரை காப்பாற்ற கால்வாயில் குதித்ததில், அவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்