கரூரில் பெரியார் நினைவு தினத்தையொட்டி திமுகவினர் 500 பேர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமாநிலையூர் பகுதியில் திமுக சார்பில் ஏராளமானோர் திரண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். இதனால் அமராவதி மேம்பாலம் தொடங்கும் கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளானதால் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.