செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படாளம் மற்றும் புக்கத்துறை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வரும் நிலையில், நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காலை நேரத்தில் பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.