மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து காவலர்கள் இல்லாததால், தாறுமாறாக வாகனங்களை இயக்கியதால் சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது பணிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமலும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். எனவே, போதிய போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்தி நெரிசலை குறைக்க வேண்டும் எனவும், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முறையான வழித்தடங்களை அமைத்துத் தர வேண்டும் எனவும் பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.