விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு அருகே திடீரென சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்வதறியாது திகைத்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சேர்ந்து பேருந்தை தள்ளிச் சென்று சாலையோரமாக நிறுத்தினர்.