திருவண்ணாமலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு ஒருமையில் பேசிய நபரை போக்குவரத்து காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதியதில், சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டி பழக்கடை மீது ஆட்டோ மோதியது. இதனைத் தொடர்ந்து மூன்று தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நிலைமையை சமாளிக்க சென்ற போக்குவரத்து காவலரை, கார் ஓட்டுநர் ஒருமையில் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த காவலர், கார் ஓட்டுநரை தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.