புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால்,ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.