கந்த சஷ்டி பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிப்பட்டனர்.