கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெறும் வார காய்கறி சந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சிரமத்திற்கு ஆளாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காட்டுக்குக்கூடலூர் செல்லும் சாலையில் வாரம் தோறும் புதன் கிழமை வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்தைக்கு காய்கறிகள் வாங்க அதிக அளவில் மக்கள் கூடுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமைப்போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் இது நிலை நீடிப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.