தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி மக்கள் செல்வதால் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த தினம், மிலாடிநபி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர்.இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.